பிரிமியர் லீக்: ஃபிர்மீனோ ஹேட்டரிக்; ஆர்சனலை கதறவிட்ட லிவர்பூல்!

பிரிமியர் லீக் தொடரில் அட்டகாசமாக விளையாடி முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணிக்கும் ஆர்சனலுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஃபிர்மீனோ ஹேட்டரிக் கோல்கள் அடிக்க, லிவர்பூல் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 | 

பிரிமியர் லீக்: ஃபிர்மீனோ ஹேட்டரிக்; ஆர்சனலை கதறவிட்ட லிவர்பூல்!

பிரிமியர் லீக் தொடரில் அட்டகாசமாக விளையாடி முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணிக்கும் ஆர்சனலுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஃபிர்மீனோ ஹேட்டரிக் கோல்கள் அடிக்க, லிவர்பூல் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் லிவர்பூல் அணி, இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டின் கடைசி போட்டியில் லிவர்பூல் அணி, ஐந்தாவது இடத்தில் உள்ள ஆர்சனல் அணியுடன் மோதியது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இரு அணிகளுமே சிறப்பான துவக்கத்தை பெற்றனர். 11வது நிமிடத்தில் ஆர்சனலின் மெயிட்லாண்ட் மைல்ஸ் கோல் அடித்தார். அதன்பின்னர், லிவர்பூல் தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடியது. 14வது நிமிடத்தில் லிவர்பூலின் ஃபிர்மீனோ கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, மூன்று ஆர்சனல் வீரர்களை தாண்டிச் சென்று, மற்றொரு அட்டகாசமான கோலை அடித்தார் ஃபிர்மீனோ. விடாமல் ஆர்சனலுக்கு நெருக்கடி கொடுத்து விளையாடிய லிவர்பூலின் சாதியோ மானே, 32வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி முடியும் நேரத்தில் லிவர்பூலின் நட்சத்திர வீரர் சாலா பந்தை கடத்திச் சென்றபோது, பெனால்டி பாக்ஸுக்குள் வைத்து ஃபவுல் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பில் சாலா கோல் அடித்தார். 4-1 என முன்னிலையோடு முதல் பாதியை முடித்தது லிவர்பூல்.

இரண்டாவது பாதியில் மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் ஃபிர்மீனோ கோல் அடித்து, பிரீமியர் லீகில் தனது முதல் ஹேட்ரிக்கை  பூர்த்தி செய்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 9 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது லிவர்பூல்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP