பிரீமியர் லீக்: செல்சியை வீழ்த்தியது டாட்டன்ஹேம்!

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் லண்டனை சேர்ந்த பலம் வாய்ந்த செல்சி மற்றும் டாட்டன்ஹாம் அணிகள் மோதிய போட்டி 3-1 என டாட்டன்ஹேமுக்கு சாதகமாக முடிந்தது. இதைத்தொடர்ந்து லீக் பட்டியலில் செல்சி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
 | 

பிரீமியர் லீக்: செல்சியை வீழ்த்தியது டாட்டன்ஹேம்!

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் லண்டனை சேர்ந்த பலம் வாய்ந்த செல்சி மற்றும் டாட்டன்ஹாம் அணிகள் மோதிய போட்டி 3-1 என டாட்டன்ஹேமுக்கு சாதகமாக முடிந்தது. இதைத்தொடர்ந்து லீக் பட்டியலில் டாட்டன்ஹேம் 3வது இடத்திற்கு முன்னேறியது.

பிரபல இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், 2017ம் ஆண்டு சாம்பியனான செல்சி அணி, பலம்வாய்ந்த டாட்டன்ஹேம் அணியுடன் மோதியது. இரண்டு அணிகளுமே லண்டனை சேர்ந்தவை என்பதனால், இந்த போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை பிரிமியர் லீக் தொடரில் 13 போட்டிகள் நடந்துள்ள நிலையில், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் மற்றும் செல்சி அணிகள் எந்த போட்டியிலும் தோற்காமல் உள்ளன. அதனால், செல்சியை நிச்சயம் தோற்கடித்தே ஆக வேண்டும், என்ற நோக்கத்துடன் டாட்டன்ஹேம் வீரர்கள் களமிறங்கினர்.

முதல் நிமிடத்திலிருந்தே, ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது டாட்டன்ஹேம். சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கி வந்த அந்த அணியின் டெலி ஆலி, 8வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், சிறிது நேரத்திலேயே நட்சத்திர வீரர் ஹேரி கேன் கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது டாட்டன்ஹேம். முதல் பாதி முடியும் போது, டாட்டன்ஹேம் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி செல்சியை திணற வைத்தது. 

இரண்டாவது பாதியில், 54 ஆவது நிமிடத்தில், டாட்டன்ஹேம் அணியின் வீரர் சன், செல்சி வீரர்கள் 3 பேரை தாண்டி அசத்தலாக பந்தை எடுத்துச் சென்று சோலோவாக கோல் அடித்தார். ஆட்டம் முடியும் நேரத்தில், 85வது நிமிடத்தில், செல்சி அணியின் ஜிரூ ஒரு ஆறுதல் கோலடித்தார். போட்டி 3-1 என முடிந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, 30 புள்ளிகளுடன் பிரீமியர் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது டாட்டன்ஹேம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP