பிரீமியர் லீக்: செல்சியை கதறவிட்ட கத்துக்குட்டி போர்ன்மவுத்!

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், 4வது இடத்தில் போராடி வரும் முன்னாள் சாம்பியன்களான செல்சியை, கத்துக்குட்டி அணியான போர்ன்மவுத் 4 -0 என துவம்சம் செய்தது.
 | 

பிரீமியர் லீக்: செல்சியை கதறவிட்ட கத்துக்குட்டி போர்ன்மவுத்!

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், 4வது இடத்தில் போராடி வரும் முன்னாள் சாம்பியன்களான செல்சியை, கத்துக்குட்டி அணியான போர்ன்மவுத் 4 -0 என துவம்சம் செய்தது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் நான்காவது இடத்தில் போராடிவரும் செல்சி அணியுடன் கத்துக்குட்டி போர்ன்மவுத் மோதியது. புதிதாக செல்சி அணி வாங்கியுள்ள நட்சத்திர அர்ஜென்டினா வீரர் ஹிகுவேயின் விளையாடும் முதல் பிரீமியர் லீக் போட்டி இதுவாகும்.

ஆரம்பத்தில் செல்சி அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் போர்ன்மவுத்தின் கோல்கீப்பர் அட்டகாசமாக செயல்பட்டதால், செல்சியால் கோல் அடிக்க முடியவில்லை. அவ்வப்போது கோல் வாய்ப்புகளை பெற்ற போர்ன்மவுத்தும் கோல் அடிக்கவில்லை. இரு அணிகளும் கோல் அடிக்காமலே, முதல் பாதி முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கி 2வது நிமிடத்திலேயே, போர்ன்மவுத் அணியின் ஜாஷ் கிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 63வது நிமிடத்தில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் செல்சி அணியின் டேவிட் லூயிஸ் செய்த ஒரு தவறால், போர்ன்மவுத்தின் இளம் வீரர் டேவிட் ப்ரூக்ஸ் கோல் அடித்தார். 74வது நிமிடத்தில் கிங் மீண்டும் மற்றொரு அடித்தார்.

போட்டி முடியும் கடைசி வினாடிகளில், கார்னர் கிக் வாய்ப்பின் மூலம், போர்ன்மவுத்தின் டேனியல்ஸ் கோல் அடிக்க, 4-0 என படுதோல்வி அடைந்தது செல்சி. பிரீமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விட 14 புள்ளிகள் பின்தங்கியுள்ள செல்சி, கத்துக்குட்டி அணியுடன் இப்படி மோசமாக தோற்றது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP