பிரீமியர் லீக்: செல்சியை வீழ்த்தியது அதிரடி ஆர்சனல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில், லண்டனை சேர்ந்த நட்சத்திர அணிகள் செல்சி மற்றும் ஆர்சனல் மோதிய போட்டியில், ஆர்சனல் முழு ஆதிக்கம் செலுத்தி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
 | 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதம் வீரர்கள் அணி மாற அனுமதிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான புதிய வீரர்களை வாங்க போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில், லண்டன் நகரை சேர்ந்த பரம எதிரிகளான ஆர்சனல் மற்றும் செல்சி அணிகள் நேற்று மோதின.

இந்த போட்டியில் ஆர்சனல் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. கொஞ்சம் கூட இடைவெளி கொடுக்காமல், ஆர்சனல் வீரர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். 13வது நிமிடத்தில் கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, லாகசெட் அட்டகாசமான கோல் அடித்து ஆர்சனலுக்கு முன்னிலை கொடுத்தார். பின்னர் 39வது நிமிடத்தில் ஆர்சனலுக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, எதிரணியை குழப்பி, ஆர்சனல் அணியின் கோசியல்னி கோல் அடித்தார். 2-0 என ஆர்சனல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 6வது இடத்தில் இருந்த ஆர்சனல், 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP