லிவர்பூலுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த மான்செஸ்டர் யுனைட்டட்!

மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகளுக்கு இடையேயான பிரிமியர் லீக் கால்பந்து போட்டி கோல் இல்லாமல் டிரா ஆனதால், பிரீமியர் லீக் கோப்பையின் கடைசி போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.
 | 

லிவர்பூலுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த மான்செஸ்டர் யுனைட்டட்!

மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகளுக்கு இடையேயான பிரிமியர் லீக் கால்பந்து போட்டி கோல் இல்லாமல் டிரா ஆனதால், மான்செஸ்டர் சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் இடையே உள்ள இடைவெளி 1 புள்ளியாக குறைந்துள்ளது.

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், சிறப்பாக விளையாடி வரும் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள், முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ள லிவர்பூல், 65 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஒரு போட்டி அதிகமாக விளையாடி இருந்ததால், 65 புள்ளிகளுடன் சிட்டி முதலிடத்தில் இருந்தது.

இந்த நிலையில், கடைசி  சில போட்டிகளில் அசத்தலாக விளையாடி புள்ளிகளை குவித்து வரும் யுனைட்டட் அணிக்கு எதிராக லிவர்பூல் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பரம எதிரிகளான லிவர்பூல், பிரீமியர் லீக் கோப்பையை வெல்லவிடாமல் தடுக்க முடியும் என்ற காரணத்தால், யுனைட்டட் அணி ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்து விளையாடியது. ஆனால், மான்செஸ்டர் யுனைட்டட் அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் முதல் பாதியிலேயே காயம் காரணமாக வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

நட்சத்திர வீரர்கள் லிங்கார்டு, மாட்டா மற்றும் ஹெரேரா ஆகிய மூவரும், முதல் 41 நிமிடங்கள் முடிவடைவதற்குள் காயம் காரணமாக வெளியேறினர். மாற்று வீரர்களை முதல் பாதியியேயே இறக்கினாலும், மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 0-0 என போட்டி முடிந்ததை தொடர்ந்து, 66 புள்ளிகளுடன் லிவர்பூல் முதலிடத்திற்கு சென்றது. 65 புள்ளிகளுடன் சிட்டி 2வது இடத்திற்கு மீண்டும் இறங்கியது. 60 புள்ளிகளுடன் டாட்டன்ஹேம் அணி 3வது இடத்தில் உள்ளது.

இன்னும் 11 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், பிரிமியர் லீக் கோப்பைக்கான கடைசி கட்ட போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும், என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP