மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி; பிரீமியர் லீக்கில் முதலிடம்

பிரீமியர் லீக் தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, எவர்டன்னுடன் மோதிய போட்டியில், கேப்ரியல் ஜீசஸ் இரண்டு கோல்களை அடிக்க, சிட்டி 3- 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 | 

நடப்பு பிரீமியர் லீக் சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் செல்சியுடன் தோற்றதை தொடர்ந்து, லிவர்பூல் அணி, லீக்கில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் லிவர்பூலுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க எவர்டன்னுடனான போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலை இருந்தது.

அதனால், சிட்டி வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து தங்கள் பாணியில் முழு அட்டாக் செய்து பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கினர். ஆனால்,  போட்டியின் முதல் வாய்ப்பு எவர்டன் அணியின் ரிச்சார்டலிசன்னுக்கு கிடைத்தது. அதை அவர் வீணாக்க, 22வது நிமிடத்தில் சிட்டி வீரர் ஜீசஸ் கோல் அடித்தார். முதல் கோலை போலவே, சிட்டி வீரர் லீராய் சானே கொடுத்த சூப்பர் பாஸை பயன்படுத்தி, ஜீசஸ் இரண்டாவது கோல் அடித்தார்.

65வது நிமிடத்தில், எவர்டன் அணியின் டொமினிக் கோல் அடித்து 2-1 என ஆக்கினார். அடுத்த சில நிமிடங்களிலேயே சிட்டியின் ஸ்டெர்லிங் கோல் அடித்து, தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். மான்செஸ்டர் சிட்டி அணி தற்காலிகமாக பிரிமியர் லீக் பட்டியலில் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது. இன்று நடைபெறும் முக்கிய போட்டியில், லிவர்பூல் அணி மான்செஸ்டர் யுனைட்டடுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறாவிட்டால், முதலிடத்தை சிட்டியிடம் லிவர்பூல் இழந்துவிடும்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP