கடைசி நிமிட கோல்: செல்சி - மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் டிரா!

பிரீமியர் லீக் தொடரில் செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டி, செல்சி அடித்த கடைசி நிமிட கோலால் 2-2 என டிரா ஆனது.
 | 

கடைசி நிமிட கோல்: செல்சி - மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் டிரா!

பிரீமியர் லீக் தொடரில் செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டி, செல்சி அடித்த கடைசி நிமிட கோலால் 2-2 என டிரா ஆனது. 

பிரீமியர் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள செல்சி, மோசமாக விளையாடி 8வது இடத்தில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் மோதியது. சர்வதேச போட்டிகளுக்கு பின் மீண்டும் க்ளப் கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ளதால்,  இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

லண்டன் ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், செல்சி ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 21வது நிமிடத்தின் போது, செல்சிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, ஆண்டனி ரூடிகர், தலையால் முட்டி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து செல்சி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி, யுனைட்டட் கோல்கீப்பர் டிகியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. முதல் பாதி 1-0 என செல்சிக்கு சாதகமாக முடிந்தது. 

இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் யுனைட்டட் மீண்டு வந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. 55வது நிமிடத்தின் போது, அந்த அணியின் மார்ஷியல் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். தொடர்ந்து யுனைட்டட் செல்சிக்கு நெருக்கடி கொடுத்து விளையாடியது. 72வது நிமிடத்தில், மார்ஷியல் மீண்டும் ஒரு சூப்பர் கோல் அடித்து யுனைட்டட் அணிக்கு முன்னிலை கொடுத்தார். 90+6வது நிமிடத்தில், வெற்றியை நோக்கி யுனைட்டட் சென்று கொண்டிருந்த கடைசி நொடிகளில், செல்சி அணியின் ராஸ் பார்க்லி கோல் அடிக்க, 2-2 என டிராவாக போட்டி முடிந்தது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP