இ.பி.எல்: முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லெஸ்டர் சிட்டி மோதல்

இங்கிலிஷ் பிரீமியர் லீகின் (இ.பி.எல்) முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - லெஸ்டர் சிட்டி அணிகள் மோதுகின்றன.
 | 

இ.பி.எல்: முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லெஸ்டர் சிட்டி மோதல்

இங்கிலிஷ் பிரீமியர் லீகின் (இ.பி.எல்) முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - லெஸ்டர் சிட்டி அணிகள் மோதுகின்றன.

27-வது இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நாளை (11ம் தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், 20 முறை இ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி, 2015ம் ஆண்டு சாம்பியனான லெய்செஸ்டர் சிட்டியுடன், மான்செஸ்டரின் தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸில் மோதுகின்றது. 

இரு அணியின் முன்னணி வீரர்கள், சிறியளவில் காயத்தாலும், உடற்தகுதி பெறுவதிலும் அவதிப்பட்டு வருவதால், புதிதாக அணியில் இணைந்துள்ள வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

மான்செஸ்டர் யுனைடெட் - லெய்செஸ்டர் சிட்டி சாத்தியமான ஆடும் லெவன் அணி விவரம்:

மான்செஸ்டர்: டேவிட் டி கியா, டார்மியன், பெயில்லி, லிண்டலாப், ஷா, மாட்டா, பெரெய்ரா, போஃபா, ஃப்ரெட், சான்செஸ், ராஷ்பர்ட்.

லெய்செஸ்டர்: ஷ்மைக்கல்,டொமிங்கோஸ், ஹாரி மகுவையர், வெஸ் மோர்கன், பென் சில்வெல், நிடிடி, ஈபோரா, மேடிசன், டெமராய் கிரே, வார்டி.

இ.பி.எல்: முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லெஸ்டர் சிட்டி மோதல்

இரு அணிகளின் புள்ளி விவரங்கள்:

லெஸ்டர் டர், கடைசியாக மான்செஸ்டரிடம் மோதிய 18 போட்டிகளில், ஒரே ஒரு முறை தான் வெற்றி பெற்றுள்ளது. 

மான்செஸ்டர் யுனைடெட் அணி, 26 துவக்க போட்டிகளில் 17 முறை வெற்றி கண்டுள்ளது. அந்த அணியின் ஜுவான் மாட்டா, லெஸ்டருக்கு எதிரான கடைசி நான்கு போட்டிகளில் 4 கோல்கள் அடித்துள்ளார். லெஸ்டருக்கு எதிராக அதிக கோல் அடித்த வீரர் மாட்டா ஆவார். 

இரு அணிகளும் துவக்க போட்டியில் வெற்றியை பெறுவதில் முனைப்பு காட்டும் என்பதால் முதல் ஆட்டமே களை கட்டப்போகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP