இ.பி.எல் 2018: ஆடியோ உரிமையை பெற்றது ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ்!

இங்கிலிஷ் பிரீமியர் லீகின் (இபிஎல்) ஆடியோ ஒலிபரப்பு உரிமையை ஸ்போர்ட்ஸ் பிளாஷ் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.
 | 

இ.பி.எல் 2018: ஆடியோ உரிமையை பெற்றது ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ்!

இங்கிலிஷ் பிரீமியர் லீகின் (இ.பி.எல்) ஆடியோ ஒலிபரப்பு உரிமையை ஸ்போர்ட்ஸ் பிளாஷ் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது. 

27-வது இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நாளை (11ம் தேதி) முதல், 2019 மே வரை நடைபெற இருக்கிறது. தற்போது இந்த போட்டிக்கான ஆடியோ ஒலிபரப்பு உரிமையை, மல்டி-ஸ்போர்ட்ஸ் ஆப் 'ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ்' பெற்றுள்ளது. 

2022ம் ஆண்டு வரை, மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு, 380 போட்டிகளுக்கான ஆடியோ ஒலிபரப்பு உரிமையை 'ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ்' பெற்றிருக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ் மற்றும் டாக்ஸ்போர்ட்ஸ் இடையே கையெழுத்திடப்பட்டது. டாக்ஸ்போர்ட்ஸ் தான் இ.பி.எல்-ன் உலக ஆடியோ பங்குதாரர்.

ஸ்போர்ட்ஸ் பிளாஷஸ் நிறுவனர் ராமன் ரஹேஜா கூறுகையில், "உலக தரமான விளையாட்டை இந்திய ரசிகர்களுக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளோம். இபிஎல்-ன் ஆடியோ ஒலிபரப்பு பங்குதாரர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறோம்" என்றார்.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP