சிட்டி மீண்டும் தோல்வி: லிவர்பூல், டாட்டன்ஹாம் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டிகளில், மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இரண்டாவது போட்டியாக தோல்வியடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 | 

சிட்டி மீண்டும் தோல்வி: லிவர்பூல், டாட்டன்ஹாம் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டிகளில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இரண்டாவது போட்டியாக தோல்வியடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி சிறப்பான துவக்கம் பெற்று ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் கிரிஸ்டல் பேலஸ்-க்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினாலும், சிட்டி 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதனால் மூன்றாவது இடத்தில் இருந்த டாட்டன்ஹேம் அணிக்கும், சிட்டிகும் இடையே இரண்டுபுள்ளிகள் வித்தியாசம் இருந்தது.

இந்நிலையில் லெஸ்டர் சிட்டி அணியுடன், மான்செஸ்டர் சிட்டி நேற்று மோதியது. இந்த போட்டியில், பெர்னார்டோ சில்வா, மூலமாக கோல் அடித்து முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி. ஆனால் அதன்பின்னர் சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் அடித்து ஷாக் வெற்றிபெற்றது லெஸ்டர்.

மற்றொரு போட்டியில், லிவர்பூல் அணி நியூகாஸில் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டியுடனான வித்தியாசத்தை 6 புள்ளிகளாக அதிகரித்துள்ளது லிவர்பூல். அதேபோல, மூன்றாவது இடத்தில் இருந்த டாட்டன்ஹேம், போர்ன்மவுத் அணியுடன் மோதியது. இதில் டாட்டன்ஹாம் அணியின் எரிக்சன், லூகாஸ், சன், கேன் ஆகியோர் கோல் அடித்தனர். 4-0 என இந்தியா வெற்றி பெற்றது. தற்போது, பிரீமியர் லீக்கின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP