செல்சி சூப்பர் வெற்றி... முதலிடம் சென்றது!

புதிய பயிற்சியாளர் மாரிசியோ சாரியின் தலைமையில் விளையாடிய செல்சி, ஹட்டர்ஸ்பீல்டை 3-0 என துவம்சம் செய்து, பிரீமியர் லீக் டேபிளில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
 | 

செல்சி சூப்பர் வெற்றி... முதலிடம் சென்றது!

புதிய பயிற்சியாளர் மாரிசியோ சாரியின் தலைமையில் விளையாடிய செல்சி, ஹட்டர்ஸ்பீல்டை 3-0 என துவம்சம் செய்து, பிரீமியர் லீக் டேபிளில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. 

பயிற்சியாளர் ஆண்டோனியோ கான்டேவுக்கு குட்பை சொன்ன செல்சி அணியின் தலைமை பொறுப்பை, இத்தாலிய க்ளப், நாபோலியின் பயிற்சியாளர் சாரி ஏற்றுக் கொண்டார். பெரிய ஐரோப்பிய க்ளப்கள் மத்தியில் நாபோலிக்கு என ஒரு இடத்தை இவர் பெற்றுத் தந்ததாலும், சிறப்பாக அட்டாக் செய்து விளையாடும் யுக்திகளை கடைபிடிப்பதாலும், இந்த சீசனில் செல்சியின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. கத்துக்குட்டி ஹட்டர்ஸ்பீல்டுடன் முதல் போட்டியில் விளையாடுவதால், முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் செல்சிக்கு இருந்தது. 

ஆனால், போட்டி துவங்கியது முதல் ஹட்டர்ஸ்பீல்டு மிகவும் சிறப்பாக விளையாடியது. செல்சி அணியின் டிபென்ஸுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து கோல் அடிக்க முயற்சி செய்தனர். முதல் அரைமணி நேரத்தில், ஹட்டர்ஸ்பீல்டின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், 34வது நிமிடத்தில் செல்ஸி கோல் அடித்து ஹட்டர்ஸ்பீல்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இடதுபக்கம் இருந்து வில்லியன் கொடுத்த ஒரு பாஸை, ங்கோலோ கான்டே கோலாக்கினார். 

முதல் பாதி முடியும் நேரத்தில், செல்சியின் அலோன்ஸோவை, எதிரணி வீரர் ஷிண்ட்லர் பவுல் செய்ய, செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. செல்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஜோர்கினோ கோல் அடிக்க, செல்சி 2-0 என முன்னிலை பெற்றது. 80வது நிமிடத்தில், செல்சி வீரர்கள் அதிரடி கவுன்ட்டர் அட்டாக் செய்தனர். அப்போது ஹசார்டு கொடுத்த பாஸை, பெட்ரோ கோல் கீப்பரை தாண்டி அடித்து 3-0 என செல்சியின் வெற்றியை உறுதி செய்தார். 

முதல் ரவுண்டின் 10 போட்டிகளில், 7 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3-0 என வெற்றி பெற்ற செல்சி, பிரீமியர் லீக் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP