பயிற்சியாளர் பேச்சை கேட்காத செல்சி வீரருக்கு ஒரு வார சம்பளம் 'கட்'

இங்கிலாந்து பிரீமியர் தொடரில் விளையாடும் பிரபல செல்சி அணியின் நட்சத்திர கோல்கீப்பர் கெப்பா, கடந்த போட்டியில் பயிற்சியாளர் பேச்சை கேட்காமல் மைதானத்தில் சர்ச்சையை கிளப்பியதற்காக ஒரு வார சம்பளத்தை அபராதமாக பெற்றுள்ளார்.
 | 

பயிற்சியாளர் பேச்சை கேட்காத செல்சி வீரருக்கு ஒரு வார சம்பளம் 'கட்'

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் பிரபல செல்சி அணியின் நட்சத்திர கோல்கீப்பர் கெப்பாவுக்கு, கடந்த போட்டியில் பயிற்சியாளர் பேச்சை கேட்காமல் மைதானத்தில் சர்ச்சையை கிளப்பியதற்காக, ஒரு வார சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்சி அணிகளுக்கு இடையே, இரு தினங்களுக்கு முன், காரபாவ் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், செல்சி அணியின் நட்சத்திர கோல்கீப்பர் கெப்பா, கடைசி நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவு சர்ச்சையைக் கிளப்பினார். ஆட்டத்தின் கூடுதல் நேரம் முடியும் 120வது நிமிடத்தில், கோல்கீப்பரை மாற்ற பயிற்சியாளர் மாரிசியோ சாரி முடிவெடுத்தார். ஏற்கனவே பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், கோல்கீப்பர் கெப்பா வெளியேற மறுத்தார்.

பயிற்சியாளர் உள்ளிடோர் கோபமாக அவரை வெளியேற சொல்லியும், மைதானத்திற்குள்ளேயே கெப்பா நின்று கொண்டிருந்தார். மற்ற வீரர்கள் அவரை வெளியே செல்ல வலியுறுத்தியும், வர மறுத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கோபத்தில் இருந்ததை காணமுடிந்தது.

தொடர்ந்து விளையாடிய கெப்பா, பெனால்டி ஷூட்டில் செய்த தவறால், செல்சி அணி கோப்பையை தவறிவிட்டது. இந்த நிலையில், பயிற்சியாளரின் பேச்சை கேட்காததால், அவருக்கு ஒரு வார சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளது செல்சி நிர்வாகம். ஒரு வாரத்திற்கு கெப்பா சுமார் 2 கோடி ருபாய் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP