மான்செஸ்டர் சிட்டிக்கு ஷாக் கொடுத்த செல்சி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை, செல்சி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், பிரீமியர் லீக்கில் லிவர்பூல் முதலிடத்தை பிடித்துள்ளது.
 | 

மான்செஸ்டர் சிட்டிக்கு ஷாக் கொடுத்த செல்சி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை, செல்சி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஷாக் கொடுத்தது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, முன்னாள் சாம்பியன் செல்சியுடன் மோதியது. பிரீமியர் லீக் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகள், இதுவரை எந்த போட்டியிலும் தோற்காமல் இருந்தன. இந்நிலையில், லண்டன் ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் மைதானத்தில் செல்சியை சந்திக்க வேண்டிய இந்த போட்டி, சிட்டிக்கு மிக சவாலான போட்டியாக பார்க்கப்பட்டது. 

எதிர்பார்த்தது போலவே ஆரம்பம் முதல் சிட்டி ஆதிக்கம் செலுத்தியது. ஸ்டெர்லிங், சானே ஆகியோருக்கு நல்ல கோல் வாய்ப்புகள் கிடைத்தும் வீணடிக்கப்பட்டன. முதல் பாதி முழுவதுமே சிட்டி வீரராகள் மிக சிறப்பாக விளையாடி செல்சிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். முழுக்க டிபென்ஸ் செய்து மட்டுமே ஆடிய செல்சி அணி, எந்த வாய்ப்புகளும் உருவாக்கவில்லை. முதல் பாதி முடியும் வேளையில், 45வது நிமிடத்தின் போது, செல்சியின் நட்சத்திர வீரர் ஹசார்டு பந்தை கடத்திச் சென்று, 3 சிட்டி வீரர்களை தாண்டி பாஸ் செய்தார். அதை, செல்சியின் கான்டே ராக்கெட் போன்ற ஷாட் அடித்து கோலுக்குள் தள்ளினார். முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலை பெற்று ஷாக் கொடுத்தது செல்சி அணி. 

இரண்டாவது பாதியில், செல்சி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். சிட்டி வீரர்களுக்கு எல்லா பக்கமும் நெருக்கடி கொடுத்து, கட்டுப்படுத்தினர். அதே நேரம், தங்களது அதிரடி அட்டாக் மூலம் கோல் வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கி வந்தனர். 78வது நிமிடத்தின் போது, செல்சி அணிக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. சிட்டி வீரர்கள் எதிர்பாராத நேரத்தில் கார்னர் கிக்கை அடித்து,  அதை செல்சியின் டேவிட் லுயிஸ் கோலாக்கினார். கடைசி வரை சிட்டியால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 2-0 என முடிந்தது. 

முன்னதாக, போர்ன்மவுத் அணிக்கு எதிரான போட்டியில், லிவர்பூல் 4-0 என வெற்றி பெற்றிருந்த நிலையில், 42 புள்ளிகளுடன் லிவர்பூல் முதலிடத்திற்கு சென்றது. மான்செஸ்டர் சிட்டி, 41 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 34 புள்ளிகளுடன் செல்சி 4வது இடத்தில் நீடிக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP