போஃபா, டி கியா மாஸ்... மான்செஸ்டர் யுனைட்டட் சூப்பர் வெற்றி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில், லெஸ்டர் சிட்டி அணியை மான்செஸ்டர் யுனைட்டட் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வெற்றி துவக்கத்தை பெற்றது.
 | 

போஃபா, டி கியா மாஸ்... மான்செஸ்டர் யுனைட்டட் சூப்பர் வெற்றி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில், லெஸ்டர் சிட்டி அணியை மான்செஸ்டர் யுனைட்டட் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வெற்றி துவக்கத்தை பெற்றது. 

மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் ட்ராஃப்போர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட், ஆட்ட லெவனில் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி இல்லாமல் களமிறங்கிய லெஸ்டரை எதிர்கொண்டது. அவருக்கு பதில் முன்னாள் மான்செஸ்டர் சிட்டி வீரர் இஹென்னாச்சோ களமிறங்கினார். 

போட்டி துவங்கிய 3வது நிமிடத்திலேயே, மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. சான்செஸ் அடித்த பந்து, லெஸ்டர் வீரரின் கையில் பட்டு எகிறியதை தொடர்ந்து ரெப்ரி பெனால்டி வழங்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பால் போஃபா கோல் அடித்து யுனைட்டட் அணிக்கு முன்னிலை கொடுத்தார். துவக்கத்திலேயே கோல் விட்டாலும், நிதானமாக விளையாடியது லெஸ்டர் சிட்டி. பல வாய்ப்புகளை உருவாக்கி கோல் முயற்சிகளை செய்து வந்தது லெஸ்டர். ஆனால், யுனைட்டட் அணியின் கோல் கீப்பர் டி கியா, பல ஷாட்களை அற்புதமாக தடுத்து லெஸ்டரை வெறுப்பேற்றினார். முதல் பாதி 1-0 என முடிந்தது. 

இரண்டாவது பாதியில், லெஸ்டர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து அந்த அணி வாய்ப்புகளை உருவாக்கி யுனைட்டட் ரசிகர்களை நகம் கடிக்க வைத்தது. மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு கிடைத்த  சில எளிய வாய்ப்புகளை லுக்காக்கு, மாட்டா ஆகியோர் தவற விட்டனர். ஆனால், 83வது நிமிடத்தில், மாட்டா கொடுத்த ஒரு அட்டகாச பாஸை பயன்படுத்தி, டிபென்ஸ் வீரர் லூக் ஷா சூப்பர் கோல் அடித்தார். இது பிரீமியர் லீகில் அவர் அடிக்கும் முதல் கோலாகும். ஆட்டம் முடியும் நேரத்தில், 90+2வது நிமிடத்தில், மாற்று வீரராக வந்த லெஸ்டரின் ஜேமி வார்டி கோல் அடித்தார். போட்டி 2-1 என முடிந்தது. 

வெற்றியுடன் 2018-19 பிரீமியர் லீக் தொடரை மான்செஸ்டர் யுனைட்டட் துவக்கியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP