பிரீமியர் லீக் காலபந்து: ஆர்சனல் அட்டகாச வெற்றி!

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஆர்சனல் - லெஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்சனல் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பிரீமியர் லீக் பட்டியலில் ஆர்சனல் தற்போது 4வது இடத்தில் உள்ளது.
 | 

பிரீமியர் லீக் காலபந்து: ஆர்சனல் அட்டகாச வெற்றி!

பிரீமியர் லீக் தொடரில், ஆர்சனல் - லெஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில், ஆர்சனல் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

புதிய பயிற்சியாளர் உனாய் எமெரியின் கீழ், தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பான பார்மில் இருந்து வரும் ஆர்சனல் அணி, லெஸ்டர் சிட்டியுடன் நேற்று லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் மோதியது. முதல் பாதியில் லெஸ்டர் சிறப்பாக ஆடியது. 31வது நிமிடத்தின் போது, லெஸ்டர் அணியின் சில்வெல் அடித்த பந்து, ஆர்சனல் வீரர் பெல்லரின் கால்களில் பட்டு கோலுக்குள் சென்றது. ஓன் கோல் மூலம், லெஸ்டர் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடியும் கடைசி நிமிடத்தில், ஆர்சனல் அணியின் மெசூட் ஓஸில், சூப்பர் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இதனால் 1-1 என முதல் பாதி முடிந்தது. 

பின்னர், இரண்டாவது பாதியில் ஆர்சனல் அணி, முழு ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து அட்டாக் செய்து, பல வாய்ப்புகளை ஆர்சனல் உருவாக்கியது. 63வது நிமிடத்தில், பெல்லரின் உதவியுடன் ஆர்சனலின் ஆபமயாங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அட்டகாசமாக மீண்டும் ஆர்சனல் அட்டாக் செய்ய, ஆபமயாங் மீண்டும் கோல் அடித்து 3-1 என முன்னிலை கொடுத்தார். 

சிறப்பாக விளையாடிய ஓஸில், அட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதோடு, தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ஆர்சனல். பிரீமியர் லீக் பட்டியலில் 4வது இடத்தில் ஆர்சனல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP