டாட்டன்ஹேமை வீழ்த்தி ஆர்சனல் சூப்பர் வெற்றி!

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில், டாட்டன்ஹேமை, ஆர்சனல் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 | 

டாட்டன்ஹேமை வீழ்த்தி ஆர்சனல் சூப்பர் வெற்றி!

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில், டாட்டன்ஹேமை, ஆர்சனல் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிரீமியர் லீக் தொடரில், 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ள டாட்டன்ஹேம் மற்றும் ஆர்சனல் அணிகள் நேற்று மோதின. லண்டனை சேர்ந்த இரு அணிகளும் விளையாடும் போட்டி என்பதால், இதன் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த சில ஆண்டுகளில், டாட்டன்ஹேம் சிறப்பாக விளையாடி, ஆர்சனலை பலமுறை வீழ்த்தியிருந்தது. புதிய பயிற்சியாளருடன் ஆர்சனல் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வரும் நிலையில், டாட்டன்ஹேம் மிகப்பெரிய பலப்பரீட்சையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

போட்டி துவங்கியது முதல் ஆர்சனல் சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆர்சனலின் அட்டாக்கை தடுக்க முடியாமல் டாட்டன்ஹேம் திணறியது.10வது நிமிடத்தின் போது, ஆர்சனல் அணியின் ஆபமயாங், ஒரு பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், டாட்டன்ஹேமின் எரிக் டயர் 30வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். 34வது நிமிடத்தில், டாட்டன்ஹேம் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதிலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹேரி கேன் கோல் அடித்து 2-1 என டாட்டன்ஹேமுக்கு முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியில், 56வது நிமிடத்தின் போது, ஆர்சனலின் ஆபமயாங் 30 அடி தூரத்தில் இருந்து ஒரு சூப்பர் கோல் அடித்து சமன் செய்தார். 74வது நிமிடத்தில் ஆர்சனலின் லாகசெட் மற்றும் 77வது நிமிடத்தில் டோரேய்ரா ஆகியோர் கோல் அடித்து 4-2 என ஆர்சனல் வெற்றி பெற உதவினர். 

இந்த வெற்றியை தொடர்ந்து இரு அணிகளும் லீக் பட்டியலில் 30 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆனால், அதிக கோல்கள் நடித்துள்ள ஆர்சனல், 4வது இடத்திற்கு முன்னேற, டாட்டன்ஹேம் 5வது இடத்திற்கு இறங்கியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP