நிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியை நிறவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு பாலிவுட் நடிகை இஷா குப்தா, அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
 | 

இங்கிலாந்து பிரீமியர் லீகில், பிரபல ஆர்சனல் அணியில் விளையாடி வருகிறார் நைஜீரிய வீரர் இவோபி. சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் சரியாக விளையாடாத ஐஓபி, கடுமையாக விமர்சிக்க பட்டதாக தெரிகிறது. ஆர்சனல் அணியின் இந்திய தூதராக விளங்குபவர் மாடல் மற்றும் பாலிவுட் நடிகை இஷா குப்தா. தனது நண்பருடன் அவர் போட்டியை பற்றி பேசிக் கொண்ட போது எழுதிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை இணையதளத்தில் பகிர்ந்தார். அதில் நடிகையின் நண்பர், இவோபி 'கொரில்லா' போல இருப்பதாக விமர்சித்திருந்தார். நிறவெறி பிடித்த வார்த்தைகளால் அந்த வீரரை விமர்சித்ததாக சமூகவலைதளங்களில் நடிகைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கோரியிருந்தார். அவை இனவெறி பிடித்த வார்த்தைகள் என தனக்கு தெரியாது என்று நடிகை கூறியிருந்தார். தற்போது சம்பந்தப்பட்ட கால்பந்து வீரருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

அதில் அவர், "நான் என்னுடைய செயல்களுக்கு மிகவும் வருந்துகிறேன். பல ஆண்டுகளாக அணியின் தீவிர ரசிகையான நான், போட்டியில் மூழ்கி பேசியதில் இப்படி நடந்துவிட்டது. நண்பர் பேசியதில் நிறவெறி வார்த்தைகள் இருந்ததை நான் உணரவில்லை. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களை காயப்படுத்தியது பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் மனதில் நிறவெறிக்கு துளியும் இடம் கிடையாது. இவ்வாறு என் வாழ்வில் மீண்டும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP