ஆர்சனலை வீழ்த்தியது அதிரடி மான்செஸ்டர் சிட்டி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், நடப்பு சாம்பியன்கள் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனலை 2-0 என வீழ்த்தி அசத்தல் வெற்றி துவக்கம் பெற்றது.
 | 

ஆர்சனலை வீழ்த்தியது அதிரடி மான்செஸ்டர் சிட்டி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், நடப்பு சாம்பியன்கள் மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனலை 2-0 என வீழ்த்தி அசத்தல் வெற்றி துவக்கம் பெற்றது.

100 புள்ளிகள் சாதனையுடன் கடந்த சீசன் பிரீமியர் லீக் கோப்பையை மான்செஸ்டர் சிட்டி கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில், முதல் போட்டியிலேயே, பலம்வாய்ந்த ஆர்சனல் அணியுடன் மோதியது. பயிற்சியாளர் வெங்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் உனாய் எமெரியின் கீழ் ஆர்சனல் தனது முதல் போட்டியில் விளையாடியது. 

மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் டி ப்ருயின் ஆட்ட லெவனில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதில், புதிய வீரர் மாஹ்ரஸ் சிட்டிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். ஆர்சனல் அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட டோரெய்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் புதிதாக வந்துள்ள 19 வயது வீரர் க்வெண்டுசி களமிறக்கப்பட்டார். 

எதிர்பார்த்தது போலவே ஆரம்பம் முதல் சிட்டி முழு ஆதிக்கம் செலுத்தியது. ஆகுவேரோ, ஸ்டெர்லிங், மாஹ்ரஸ், பெர்னார்டோ சில்வா ஆகியோரின் தொடர் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆர்சனல் திக்குமுக்காடியது. 14வது நிமிடத்தில், சிட்டியின் ஸ்டெர்லிங் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இடதுபக்கம் இருந்து பந்தை வாங்கிய அவர், 4 ஆர்சனல் வீரர்களை தாண்டிச் சென்று, ராக்கெட் போன்ற ஷாட் அடித்து மான்செஸ்டர் சிட்டிக்கு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து ஆர்சனல் தடுமாறியது. ஆர்சனலுக்காக தனது முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் க்வெண்டுசி செய்த சில தவறுகள் சிட்டிக்கு மேலும் சாதகமாக அமைந்தது. முதல் பாதி 1-0 என முடிந்தது. 

இரண்டாவது பாதியில், மான்செஸ்டர் சிட்டி, கொஞ்சம் பொறுமையாகவே விளையாடியது. இதை பயன்படுத்தி ஆர்சனல் அணி அடுத்தடுத்து அட்டாக் செய்தது. தொடர்ந்து சில வாய்ப்புகள் ஆர்சனலுக்கு சாதகமாக கிடைத்தாலும், அது கோலுக்குள் செல்லவில்லை. மான்செஸ்டர் சிட்டி தடுமாறி வந்த நேரத்தில், அந்த அணியின் பெர்னார்டோ சில்வா கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். அதன்பின், போட்டி முடியும் வரை ஆர்சனலை மான்செஸ்டர் சிட்டி தனது கட்டுக்குள் வைத்திருந்தது. போட்டி 2-0 என முடிந்தது. 

பிரீமியர் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை கைப்பற்றும் முயற்சியை முக்கியமான வெற்றியோடு துவக்கியுள்ளது மான்செஸ்டர் சிட்டி. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP