பாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 397 ரன்களை குவித்துள்ளது.
 | 

பாவம்யா ஆப்கானிஸ்தான்...இப்படியா அடிப்பீங்க... சாமியாடிய மோர்கன்...இங்கிலாந்து 397

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 397 ரன்களை குவித்துள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வின்சி, பேர்ஸ்டோவ் களமிறங்கினார்கள். 

வின்சி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவ்லத் ஜட்ரான் பந்துவீச்சில் அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய ரூட், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து, இருவரும் அதிரடியாக அரைசதம் அடித்தனர். தொடர்ந்து நன்றாக ஆடி வந்த பேர்ஸ்டோவ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் (30 ஓவர்) ஸ்கோர் 164 என இருந்தது.

பின்னர், கேப்டன் மோர்கன் களமிறங்கினார். நடப்பு உலகக்கோப்பையில் நன்றாக ஆடிவரும் ரூட் அரைசதம் அடித்தார். இதன்பிறகு ஆட்டத்தில் சிங்கிள், டபுள் பார்க்கமுடியவில்லை. ஏனென்றால், அவ்வளவு சிக்ஸர்களை மோர்கன் பறக்கவிட்டார். தொடர்ந்து ஆப்கான் பவுலர்களின் பந்துவீச்சை விளாசிய மோர்கன் 57 பந்துகளின் சதம் அடித்து மெர்சல் காட்டினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் கண்ட 4-ஆவது வீரர் என்ற சாதனையை மோர்கன் படைத்துள்ளார்.

மோர்கன் தொடர்ந்து மொரட்டுதனமாக அடிக்க, இதனிடையே நன்றாக ஆடி வந்த ரூட் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நைப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மோர்கன், ரூட் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்களை சேர்த்தது.

ரூட்டை தொடர்ந்து பட்லர் களமிறங்க, ஒருபக்கம் சிக்ஸர் மட்டுமே அடித்து வரும் மோர்கனை கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கான் வீரர்கள் திணறினார்கள். மோர்கன் 17 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஒரு நாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 150 ரன்கள் எடுப்பார் என்று பார்த்தால் 148 ரன்களில் ( நைப் பந்துவீச்சில்) ஆட்டமிழந்தார் மோர்கன். 

பின்னர், ரூட் , ஸ்டோக்ஸ் 2 ரன்களில் பெவிலியன் திரும்ப, கடைசி சில ஓவர்களில் மொயின் அலி தன் பங்கிற்கு 9 பாலில் 31 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்து, ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 398 ரன்களை நிர்ணயித்துள்ளது.    

அதிகபட்சமாக மோர்கன் 17 பந்தில் ( சிக்ஸர் 17, பவுண்டரி 4) 148,     பேர்ஸ்டோவ் 99 பந்தில் 90  ( சிக்ஸர் 3, பவுண்டரி 8), ரூட் 82 பந்தில் 88 ( சிக்ஸர் 1, பவுண்டரி 5) ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் நைப், தவ்லத் ஜட்ரான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP