மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!

சர்வதேச அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை 6வது முறையாக தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
 | 

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை 6 -வது முறையாக தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான 19-ஆவது உலக தனிநபர் செஸ் போட்டி கடந்த ஜூன் 27 -ஆம் தேதி முதல் ஜுலை 6 -ஆம் தேதி வரை, சுலோவாக்கிய நாட்டின் ரூசோம்பர்க் நகரில் நடைபெற்றது. இதில்  சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 11 வீரர், வீராங்கனைகள் உட்பட 44 பேர் கலந்துகொண்டனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!

இப்போட்டியில்  இந்தியா சார்பில் பங்கேற்ற திருச்சி வீராங்கனை ஜெனிட்டா ஆண்டோ, 9 சுற்றுகளில் 5ல் வெற்றி பெற்று 2ல் சமன் செய்தும் 2 போட்டிகளில் தோல்வி என்கிற அடிப்படையில் 9-5 புள்ளிகள் பெற்று மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 6வது முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து தாயகம் திரும்பிய தங்க மங்கைக்கு, திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!

அப்போது பேசிய ஜெனிட்டா ஆண்டோ, கடந்த முறையைவிட இந்த முறை சற்று போட்டி கடினமாக இருந்ததாகவும், இருந்தாலும் முயற்சி செய்து தொடர்ந்து 6வது முறையாக தங்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 2022 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஏசியன் போட்டியில் அதிக மெடல்களை வாங்குவதே தனது விருப்பம் என்றும் ஜெனிட்டா தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP