உலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம், மனிஷா காலிறுதிக்கு முன்னேற்றம்

டெல்லியில் நடைபெற்று வரும் 10வது உலக குத்து சண்டை போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மனிஷா, ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். லவ்லினா போர்கோஹைன், பாக்யபதி கச்சாரி ஆகியோரும் காலிறுதியை உறுதி செய்தனர்.
 | 

உலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம், மனிஷா காலிறுதிக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தான் வீராங்கனை அய்ஜெரிம் கேசனாயேவாவுடன் மோதினார். தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று சுற்றுக்கள் கொண்ட ஆட்டத்தின் முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது சுற்றில் கொஞ்சம் தடுமாறினார். பின்னர் 3வது சுற்றில் எழுச்சி கண்ட மேரிகோம், இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ‘இளம் புயல்’ மனிஷா மோன் 54 கிலோ பிரிவில், உலக சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை டினா ஜோலாமானுடன் மோதினார். முதல் சுற்றில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மனிஷா, 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதியை எட்டினார். 

இதே போல் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 69 கிலோ பிரிவில் பனாமா வீராங்கனை ஏதெய்னா பைலோனையும் , பாக்யபதி கச்சாரி  81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP