தேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி வென்ற வீரருக்கு சிறப்பான வரவேற்பு!

தேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

தேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி வென்ற வீரருக்கு சிறப்பான வரவேற்பு!

தேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள தாராக ராமாராஜ் விளையாட்டு மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தேசிய ஜூனியர் தடகள போட்டிகள் நடைபெற்றது. 14 முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நாடு முழுவதிலிருமிருந்து  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  தமிழகத்திற்கு 5 தங்க பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

இதில், திருச்சி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தின் பயிற்சியாளர் சீனிவாசனிடம் பயிற்சி பெற்ற மாணவன் சுரஜ் 400 மீ ஒட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்நிலையில், வெள்ளிபதக்கத்துடன் திருச்சி வந்த தடகள வீரர் சுரஜ்க்கு திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், தடகள சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, பழனிசாமி, சுஜா, மற்றும் தடகள வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டு நினைவு பரிசுகள் மற்றும் பொன்னாடைகள் போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP