சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...!

சென்னையில் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம்தேதி வரை ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.
 | 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் அமைந்துள்ள உள் விளையாட்டரங்கம் மற்றும் திறந்தவெளி குத்துச் சண்டை மேடையில் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஆடவர் மற்றும் மகளிருக்கான சப்-ஜுனியர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கம் அறிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP