மாநில கைப்பந்து போட்டி: பெரம்பலூரை வீழ்த்தியது சென்னை !

சென்னையில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில், 2-1 என்ற செட்கணக்கில் பெரம்பலூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 | 

மாநில கைப்பந்து போட்டி: பெரம்பலூரை வீழ்த்தியது சென்னை !

சென்னையில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில்,  2-1 என்ற செட்கணக்கில் பெரம்பலூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

நேற்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஆடவர் பிரிவில் சென்னை - பெரம்பலூர் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 25-08, 24-26, 25-15 என்ற புள்ளிக் கணக்கில் பெரம்பலூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல், கடலூர், நாமக்கல், திருவாரூர், திருநெல்வேலி, விருதுநகர், சேலம் ஆகிய அணிகள் நேற்றைய லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. 

மகளிர் பிரிவில், ஈரோடு அணி திருவண்ணாமலை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல் திருப்பூர் அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக அட்ஹாக் கமிட்டி அறிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP