மாநில கைப்பந்து: கோப்பையை வென்றன கோவை, சேலம் அணிகள் !

தமிழ்நாடு மாநில ஜுனியர் கைப்பந்து போட்டியில், சிறுவர் பிரிவில் கோவை அணியும், சிறுமியர் பிரிவில் சேலம் அணியும் கோப்பையை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
 | 

மாநில கைப்பந்து: கோப்பையை வென்றன கோவை, சேலம் அணிகள் !

சென்னையில் நடைபெற்ற  44வது தமிழ்நாடு மாநில ஜுனியர் கைப்பந்து போட்டியில், சிறுவர் பிரிவில் கோவை அணியும், சிறுமியர் பிரிவில் சேலம் அணியும் கோப்பையை வென்றன. 
 
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 44வது தமிழ்நாடு மாநில ஜுனியர் கைப்பந்து போட்டி கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. போட்டியை கால்ஸ் நிறுவன இணை மேலாண் இயக்குநர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். 

நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் நேற்று (டிச.10) மாலை நடைபெற்றது.  இறுதிப் போட்டியின் சிறுவர் பிரிவில் கோவை அணியும் திருச்சி அணியும் மோதின. இதில், கோவை அணி 21-25, 30-28, 25-23, 23-25, 15-13 என்ற புள்ளிக் கணக்கில் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் கோவை அணி 44வது தமிழ்நாடு மாநில ஜுனியர் கைப்பந்து போட்டியின் கோப்பையை வென்றது. திருச்சி வெள்ளியைக் கைப்பற்றியது. தருமபுரி 3வது இடத்தையும், நாமக்கல் 4வது இடத்தையும் கைப்பற்றின. 
மாநில கைப்பந்து: கோப்பையை வென்றன கோவை, சேலம் அணிகள் !
சிறுமியர் பிரிவில் சேலம்-ஈரோடு அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் சேலம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ஈரோடு இரண்டாவது இடத்தையும், திருவாரூர், காஞ்சிபுரம் அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களையும் பிடித்தன. 
மாநில கைப்பந்து: கோப்பையை வென்றன கோவை, சேலம் அணிகள் !
வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவர் எஸ்.வாசுதேவன் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில், அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெற்றவரான ஸ்ரீதரன், தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க நிர்வாகி பிரபாகரன், சர்வதேச வீரர் நடராஜன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 
மாநில கைப்பந்து: கோப்பையை வென்றன கோவை, சேலம் அணிகள் !
இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர், வீராங்கனைகள், சண்டிகரில், வரும் 19 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜுனியர் கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்கவுள்ளதாக, தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP