மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்கியது !

சென்னையில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. இன்று (டிச.7) காலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் கோவை, கரூர் அணிகளும், சிறுமயர் பிரிவில் காஞ்சிபுரம் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
 | 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியை கால்ஸ் நிறுவன இணை மேலாண் இயக்குநர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெற்றவரான ஸ்ரீதரன், தமிழ்நாடு மாநில கைப்பந்து நிர்வாகி பிரபாகரன், சர்வதேச வீரர் நடராஜன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 

மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்கியது !

இன்று காலை நடைபெற்ற போட்டியில் சிறுவர் பிரிவில் கோவை அணி 2-0 என்ற செட் கணக்கில் மதுரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் கரூர் அணி, கன்னியாகுமரி அணியை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சிறுமியர் பிரிவில் திருவள்ளுர் அணியை வீழ்த்தி காஞ்சிபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள், சண்டிகரில் டிசம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜுனியர் கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்கவுள்ளதாக, தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP