மாநில ஃபிஸ்ட்பால் போட்டி: வேலூர், காஞ்சி அணிகள் சாம்பியன்...!

சேலத்தில் நடைபெற்ற மாநில ஃபிஸ்ட்பால் போட்டியில் ஆடவர் பிரிவில் வேலூர் அணியும், மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. காவல்துறை ஆணையாளர் சங்கர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
 | 

மாநில ஃபிஸ்ட்பால் போட்டி: வேலூர், காஞ்சி அணிகள் சாம்பியன்...!

சேலத்தில் நடைபெற்ற மாநில ஃபிஸ்ட்பால் போட்டியில் ஆடவர் பிரிவில் வேலூர் அணியும், மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. 

ஆடவர் மற்றும் மகளிருக்கான 2வது மாநில ஃபிஸ்ட்பால் போட்டி சேலத்தில் உள்ள லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வேலூர்-சேலம் அணிகள் மோதின. இதில் வேலூர் அணி 11-07, 13-12 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் அணியை வீழ்த்தியது. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் சென்னை அணி நாமக்கல் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டங்களில் மூலம் வேலூர், சேலம், சென்னை ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. 

மாநில ஃபிஸ்ட்பால் போட்டி: வேலூர், காஞ்சி அணிகள் சாம்பியன்...!

மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் அணி முதலிடத்தையும், நாமக்கல் இரண்டாவது இடத்தையும், சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்தன. சென்னையைச் சேர்ந்த கிரேஸ்லின், சேலத்தைச் சேர்ந்த ஹரி ஆகியோர் போட்டியின் சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டனர். 

தமிழ்நாடு ஃபிஸ்ட்பால் சங்கத் தலைவர் பாலவிநாயகம் முன்னிலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சேலம் மாவட்ட காவல்துறை ஆணையாளர் சங்கர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கெவின் ஆனந்தராஜ், நிர்வாகிகள் ரமேஷ்குமார், சீனிவாசன், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP