தெற்காசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்!

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் அபராமாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
 | 

தெற்காசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்!

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் அபராமாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 

13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் கடந்த ஒன்றாம் தேதி வெகுவிமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில்  இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதேபோல், பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 

டிரையத்லான் பந்தயத்தில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஆதர்ஷா எம்.என்.சினிமோல் 1 மணி 2 நிமிடம் 51 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் பிஷ்வோர்ஜித் 1 மணி 2 நிமிடம் 59 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இதேபோல், பெண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை சரோஜினி 1 மணி 14 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரகன்யா 1 மணி 14 நிமிடம் 57 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP