தென்னிந்திய பளுதூக்கும் போட்டி: 5 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு!

கோவை தனியார் கல்லூரில் நடைபெற்று வரும் தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
 | 

தென்னிந்திய பளுதூக்கும் போட்டி: 5 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு!

கோவை தனியார் கல்லூரில் நடைபெற்று வரும் தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் மற்றும் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் இணைந்து நடத்தும் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் கோவை நேரு கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது.

தென்னிந்திய பளுதூக்கும் போட்டி: 5 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு!

இதில் சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன், கோவை மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் ஜி.கே.செல்வகுமார் மற்றும் நேரு கல்லூரி செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். 

தென்னிந்திய பளுதூக்கும் போட்டி: 5 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு!

இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து 200 வீரர்கள் மற்றும் 180 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஜூனியர் மற்றும் சீனியர்  என பளு  அடிப்படையில் 5 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில், வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வரும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP