தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி: கோபிசெட்டிப்பாளையம் முதலிடம்

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கோபி செட்டிபாளையம் அணி கோப்பையை தட்டி சென்றது.
 | 

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி: கோபிசெட்டிப்பாளையம் முதலிடம்

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் கோபி செட்டிபாளையம் அணி கோப்பையை தட்டி சென்றது.

கோவை மாவட்ட ஊரக கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கான தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில், கடந்த 27ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். 

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி: கோபிசெட்டிப்பாளையம் முதலிடம்

நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் கோபிசெட்டிபாளையம் அணியும், சென்னை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி கோபிசெட்டிபாளையம் அணியினர் முதல் இடத்தை கைப்பற்றி கோப்பை, பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை தட்டிசென்றனர். மேலும் மூன்று இடங்களை பெற்ற சென்னை, கேரளா, ஆந்திரா அணியினருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP