மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி

மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி
 | 

மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் சிறுவர் பிரிவில் சிவகங்கை மாவட்ட அணியும், சிறுமியர் பிரிவில் கடலூர் மாவட்ட அணியும் வெற்றி பெற்றுள்ளன. 

சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் பள்ளியில். 11 வயதிற்கு உட்பட்டேடாருக்கான மாநில அளவிலான ரோல்பால் போட்டி கடந்த 19ஆம் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், 22 மாவட்டங்களில் இருந்து 22 சிறுவர் மற்றும் 12 சிறுமியர் அணிகள் பங்கேற்றனர். 

இன்று நடைபெற்ற சிறுவர் இறுதிப் போட்டியில், சிவகங்கை, கோவை அணிகள் மோதின. இதில் சிவகங்கை அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. கோவை இரண்டாவது இடத்தையும், நீலகிரி, கடலூர் ஆகிய அணிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. 

மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி

சிறுமியர் பிரிவில், கடலூர் முதல் இடத்தையும், கோவை இரண்டாவது இடத்தையும், திருவள்ளுர், தருமபுரி ஆகிய அணிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த வீராங்கனைக்கான பரிசு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபிக்ஷாவுக்கு வழங்கப்பட்டது. 

பரிசளிப்பு நிகழ்ச்சியில் எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் ரீட்டா ஜான், எஸ்டிஏடி மேலாளர் சாமுவேல் டானியேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்தப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக சென்னை மாவட்ட ரோல்பால் சங்கத் தலைவர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP