துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்!

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
 | 

துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்!

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 

சீனாவில் ஐஎஸ்.எஸ்.எஃப் சார்பில் உலகத்துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பெண்களுக்கான 10.மீ ஏர் ரைபிள் பிரிவில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். முன்னதாக 10.மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனுபக்கர் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், ஒரு சில்வர், ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP