ரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி!

ரூபே புரோ வாலிபால் லீக் முதல் தொடரில் கேரளாவின் காலிகட் ஹீரோஸ் அணியை வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
 | 

ரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி!

ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் கேரளாவின் காலிகட் ஹீரோஸ் அணியை வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ரூபே புரோ வாலிபால் லீக் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் கொச்சி புளூஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்திய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கேரளாவின் காலிக்கட் ஹீரோஸ் அணியுடன் மோதியது. 

ரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி!

சென்னை அணியின் நவீன் ராஜா கலக்கலான ஒரு ஸ்பைக் மூலம் ஆட்டத்தின் முதல் புள்ளியை எடுத்து போட்டியை முன்னெடுத்து சென்றார். முதல் செட்டில் 15-11 என புள்ளிகளை குவித்த சென்னை அணி இரண்டாவது செட்டில் கேரளா அணியின் தவறுகளால், அதிக புள்ளிகளை பெற்றது. மூன்றாவது செட்டில் விழிப்புடன் எழுந்த காலிக்கட் வீரர்கள், கடுமையான போட்டி தந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

ரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி!

இறுதிக்கட்டத்தில் எதிரணி வீரர் ஜெரோம் வினித் செய்த தவறு சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியானது. இறுதியாக சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 15-11, 15-12, 10-13, 16-14 என்ற செட் கணக்கில் முதலாவது புரோ வாலிபால் லீக் பட்டத்தை கைப்பற்றி, ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தனர். இப்போட்டியில், வெராஃப் அதிகபட்சமாக 13 புள்ளிகளும், நவீன் ராஜா 8 புள்ளிகளும், அகின் 5 புள்ளிகளும், சொரோக்கின்ஸ் 3 புள்ளிகளும் எடுத்தனர்.

புரோ வாலிபால் முதல் லீக் தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் ரூடி வெராஃப் அதிகபட்சமாக 106  புள்ளிகளை பெற்றதோடு, அதிக புள்ளிகள் எடுத்த அணிகள் பட்டியலில் 436 புள்ளிகளுடன் சென்னை 2வது இடம் பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP