புரோ வாலிபால் லீக்: தீவிர பயிற்சியில் சென்னை ஸ்பார்டன்ஸ் !

கொச்சியில் நடைபெறவுள்ள புரோ வாலிபால் லீக் போட்டியில் பங்குபெறவுள்ள சென்னை ஸ்பார்டன் அணி கோப்பையை வெல்லும் முயற்சியில், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நிச்சயம் வெற்றி உண்டு என அணியின் பயிற்சியாளர் எம்.ஹெச்.குமாரா நம்பிக்கை.
 | 

புரோ வாலிபால் லீக்: தீவிர பயிற்சியில் சென்னை ஸ்பார்டன்ஸ் !

கொச்சியில் நடைபெறவுள்ள புரோ வாலிபால் லீக் போட்டியில் பங்குபெறவுள்ள சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கோப்பையை வெல்லும் முயற்சியில், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி கொச்சியில் தொடங்கவுள்ளது.  வரும் 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கொச்சியிலும், 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையிலும் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. 

கொச்சியில் வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள துவக்க விழாவைத் தொடர்ந்து முதல் ஆட்டத்தில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர் அணி, யு-மும்பா அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் காலிகட் ஹீரோஸ் அணி, சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் மோதுகின்றது.

இந்நிலையில், ஏற்கனவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இன்று சென்னை ஐ.சி.எப். விளையாட்டரங்கில் பயிற்சி போட்டியில் பங்கேற்றது. சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் ஷெல்டன் மோசஸ் (கேப்டன்), நவீன் ராஜா ஜேக்கப், விபின் ஜார்ஜ், ரூசல்ஸ் சோரோகின் (ரஷ்யா) உள்ளிட்ட சர்வதேச நட்சத்திர வீரர்கள் உள்ளதால், புரோ வாலிபால் லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு வெற்றி  நிச்சயம் என அணியின் பயிற்சியாளர் எம்.ஹெச்.குமாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP