புரோ வாலிபால்: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தோல்வி

கொச்சியில் நடைபெற்ற புரோ வாலிபால் போட்டியில் கேரளா அணியுடன் மோதிய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி போராடி தோற்றது. சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர் வெராஃப் 8 புள்ளிகளும், அகின் 6 மற்றும் நவீன் 5 புள்ளிகளும் எடுத்தனர்.
 | 

புரோ வாலிபால்: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தோல்வி

கொச்சியில் நடைபெற்ற புரோ வாலிபால் போட்டியில் கேரளா அணியுடன் மோதிய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி போராடி தோற்றது. 

கொச்சி ராஜூவ் காந்தி மைதானத்தில், ரூபே புரோ வாலிபால் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கேராளாவின் காலிகட் ஹீரோஸ் அணியுடன் மோதியது. தொடக்கத்தில் சென்னை மற்றும் கேரளா அணிகள் மாறி, மாறி புள்ளிகளை எடுத்தாலும் பின்னர் கேரளா அணி புள்ளிகளை குவித்து முன்னேறியது.

புரோ வாலிபால்: சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தோல்வி

இருப்பினும் சென்னை வீரர்கள் சளைக்காமல் ஈடுகொடுத்து விளையாடினர். போட்டியின் முடிவில், 15-8, 15-8, 13-15, 15-11 என்ற செட் கணக்கில் காலிகட் ஹீரோஸ் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர் வெராஃப் 8 புள்ளிகளும், அகின் 6 மற்றும் நவீன் 5 புள்ளிகளும் எடுத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP