புரோ கபடி லீக்:குஜராத்தை வீழ்த்தியது மும்பை !

டெல்லியில் நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் அணியை 36 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி 13வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
 | 

புரோ கபடி லீக்:குஜராத்தை வீழ்த்தியது மும்பை !

டெல்லியில் நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் அணியை 36 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. 

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பை - குஜராத் பார்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 
 
இந்த போட்டியின் முதல் பாதியில் 17 - 14 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்து வந்தது.  இறுதியில், மும்பை அணி 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி 13வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP