புரோ கபடி லீக் - எத்தனை வீரர்கள், எத்தனை கோடிக்கு ஏலம்?

வரும் ஜூலை முதல் நடைபெறவுள்ள புரோ கபடி லீக் போட்டியிக்கு மொத்தம் 50 கோடி ரூபாய்க்கு 200 வீரர்கள் ஏலம் போயுள்ளனர். இதில் 27 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

புரோ கபடி லீக் - எத்தனை வீரர்கள், எத்தனை கோடிக்கு ஏலம்?

வரும் ஜூலை முதல் நடைபெறவுள்ள புரோ கபடி லீக் போட்டியிக்கு மொத்தம் 50 கோடி ரூபாய்க்கு 200 வீரர்கள் ஏலம் போயுள்ளனர். 

இந்தியாவில் பல்வேறு நகரங்களில், வரும் ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை 7-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெறவுள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
 
நிகழாண்டிறங்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்தார்த் தேசாய் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.  நேற்று நடைபெற்ற ஏலத்தில் நீரஜ் குமார் அதிகபட்ச விலைக்கு போயுள்ளார். கடைசியில் அவரை ரூ.44.75 லட்சத்துக்கு பாட்னா பைரட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.  ஹரியானாவின் விகாஸ் காலே ரூ.34.25 லட்சத்துக்கும், நவீன் ரூ.33.5 லட்சத்துக்கும், தமிழ் தலைவாஸின் அஜித்  ரூ.32 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். கே.செல்வமணியை (தமிழ்நாடு) ரூ.16.05 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மற்றொரு தமிழக வீரர் சி.அருண் தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.  கடந்த 2 நாள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 12 அணிகளும் சேர்ந்து மொத்தம் 200 வீரர்களை ரூ.50 கோடிக்கு வாங்கி இருக்கின்றனர். இதில் 27 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP