பாக். பிரதமர் இம்ரான் கானின் படத்தை மூடியது இந்திய கிரிக்கெட் கிளப்

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கிளப்பில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டின் பிரதமருமான இம்ரான் கானின் உருவப்படம் மூடப்பட்டுள்ளது.
 | 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 48 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

பிசிசிஐ-யின் அங்கமான இந்திய கிரிக்கெட் கிளப்பில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவப்படம் உள்ளது. நாடு முழுதும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இம்ரான் கானின் உருவப்படத்தை இந்திய கிரிக்கெட் கிளப் மூடியுள்ளது. கிளப்பின் உணவகத்தில் அவரது உருவப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரின் படம் நிரந்தரமாக அங்கிருந்து நீக்கப்படுமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் க்ளப் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP