57 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டி!

கோவையில் 16வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெறுவதையொட்டி, தேவையான முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 | 

கோவை பீளமேடு பகுதியிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டரங்கில் 16வயதுக்குட்பட்டோருக்கான 36வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் வரும் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர், மகளிர் அணிகள் என 700 வீரர், வீராங்கனைகள் மற்றும் 60 தேசிய நடுவர்கள் கலந்து கொள்கின்றனர்.  

இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டியில் முதல் மூன்று இடங்களை ராஜஸ்தான், மகாராட்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

57 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டி!

கோவையில் கடந்த 1962ஆம் ஆண்டு தேசிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 57ஆண்டுகளுக்கு பிறகு தேசிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தேசிய கூடைப்பந்து சம்மேளனம் கோவைக்கு வழங்கியுள்ள து. இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வீரர்,வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள் தங்குவதற்கான இடம் வசதி, உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP