தேசிய எறிபந்து போட்டி: தமிழக மகளிர் சாம்பியன் !

ராஜஸ்தானில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பைக்கான எறிபந்து போட்டியில் தமிழக மகளிர் அணி, மத்தியப் பிரதேச அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆடவர் அணி வெண்கலத்தை கைப்பற்றியது.
 | 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பெடரேஷன் கோப்பைக்கான 29வது தேசிய  எறிபந்து போட்டி நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக மகளிர் அணி, மத்தியப் பிரதேச அணியுடன் மோதியது. இதில் தமிழக அணி 15-10, 15-12 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், கர்நாடகா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றின. 

தேசிய எறிபந்து போட்டி: தமிழக மகளிர் சாம்பியன் !

ஆடவர் பிரிவில் மத்தியப் பிரதேச அணி முதல் இடத்தையும், கர்நாடக அணி இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றின. வெற்றி பெற்ற அணிகளுக்கு நாளை (செவ்வாய் கிழமை) சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP