பிரெஞ்ச் ஓபனில் 12-வது முறையாக தொடர் வெற்றி: நடால் சாதனை !

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். நடாலுக்கு ரூ.18 கோடியும், டொமினிக் திம்முக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
 | 

பிரெஞ்ச் ஓபனில் 12-வது முறையாக தொடர் வெற்றி: நடால் சாதனை !

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டு வீரரான ரபெல் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மும் மோதினர். 3 மணி ஒரு நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

நடாலுக்கு ரூ.18 கோடியும், 2-வது இடத்தைக் கைப்பற்றிய டொமினிக் திம்முக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP