உடலுறுப்பை இழந்தும் சாதனை படைத்த மானஸி ஜோசி!

விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் இழக்காத மானஸி ஜோசி முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 | 

உடலுறுப்பை இழந்தும் சாதனை படைத்த மானஸி ஜோசி!

விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் இழக்காத மானஸி ஜோசி முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் மானஸி ஜோசி. இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தாலும், சிறுவயது முதலே விளையாட்டில் இருந்த ஆர்வம் அவரை விடவில்லை. பேட்மிண்டனில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வந்தார். 

பின்னர், வேலையில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகி பேட்மிண்டனில் தனது முழு நேரத்தையும் செலவிட தொடங்கிய மானஸி ஜோசிக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில் மாஸியின் இடது காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், செயற்கை காலுடன் நடக்க பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், தன்னம்பிக்கையை இழக்காமால் விடாமுயற்சியுடன் மீண்டும் பேட்மிண்டனில் விளையாட பயிற்சி எடுத்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஏசியன் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற மானஸி 7 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதனிடையே சுவிட்சர்லாந்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானஸி நயன ஜோசி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP