புரோ வாலிபால் லீக் அறிமுகம் - 2019 பிப்ரவரியில் கோலாகாலத் தொடக்கம்

கைப்பந்து ரசிகர்களுக்காக, இந்தியாவில் முதன்முறையாக ”புரோ வாலிபால் லீக்” 2019 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிமுக விழா மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. வரும் 2019 பிப்ரவரி மாதம் கோலாகாலமாக தொடங்கவுள்ளது.
 | 

புரோ வாலிபால் லீக் அறிமுகம் - 2019 பிப்ரவரியில் கோலாகாலத் தொடக்கம்

இந்திய கைப்பந்து சம்மேளம், பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் புரோ கைப்பந்து லீக் ஆகியவற்றின் விடா முயற்சியின் பலனாக, கைப்பந்து ரசிகர்களுக்காக, இந்தியாவில் முதன்முறையாக ”புரோ வாலிபால் லீக்” 2019 பிப்ரவரி மாதம்  நடைபெறவுள்ளது. இதற்கான அறிமுக விழா மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது

கடந்த 2008 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. இதன் வரிசையில் தற்போது கைப்பந்து இணைந்துள்ளது.  
புரோ வாலிபால் லீக் உலகின் ஐந்தாவது மிக பிரபலமான விளையாட்டாகும். இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் வரும் 2019 பிப்ரவரி மாதம் கோலாகாலமாக, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளது.

புரோ வாலிபால் லீக் போட்டியின் அறிமுக விழா நேற்று (திங்கட்கிழமை) மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவர் எஸ்.வாசுதேவன், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் ஆதரவுடன், வரும் 2019 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறவுள்ள புரோ வாலிபால் லீக் போட்டியை இந்திய கைப்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கண்டு ரசிப்பர் என்றும், நாடு முழுவதும் உள்ள  கைப்பந்து ரசிகர்களுக்கு, இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

புரோ வாலிபால் லீக் அறிமுகம் - 2019 பிப்ரவரியில் கோலாகாலத் தொடக்கம்

இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பார் மாதம் 13, 14 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒரு அணியின் 12 வீரர்களில், 2 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நட்சத்திர வீரரும், 21 வயதுக்குட்பட்ட 2 இளம் வீரர்களும் இதில் அடங்குவர். 

புரோ வாலிபால் லீக் போட்டியின் அறிமுக விழாவில், புரோ வாலிபால் லீக் சி.இ.ஒ. ஜாய் பட்டாச்சாரியா, இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர்  ராமவ்தார் சிங் ஜாக்கர், சர்வதேச கைப்பந்து கூட்டமைப்பின் ஆசிய இயக்குநர் லூயிஸ் அலெக்ஸாண்டர், பேஸ்லைன் வென்ச்சர்ஸ்  மேலாண் இயக்குநர் துஹின் மிஸ்ரா மற்றும் இந்திய கைப்பந்து சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP