2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய நடை போட்டி வீரர்

ஆசிய நடை போட்டியில் சிறப்பாக விளையாடி 4வது இடம் பிடித்த இந்திய வீரர் இர்பான் கே.டி 2020ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 | 

2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய நடை போட்டி வீரர்

ஆசிய நடை போட்டியில் சிறப்பாக விளையாடி 4வது இடம் பிடித்த இந்திய வீரர் இர்பான் கே.டி,  2020ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

ஜப்பானின் நோமி பகுதியில் ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர் இர்பான் கே.டி,  20 கி.மீட்டர் பிரிவில் பங்கேற்றார். அவர் ஒரு மணி நேரம் 20 நிமிடம் 57 நொடிகளில் இந்த போட்டியின் இலக்கை எட்டியுள்ளார்.

இந்த போட்டியில் அவர் 4வது இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் 2020ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 

இவர் முன்னதாக 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடம் பிடித்ததன் மூலம் அவர் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் வரும் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கும் தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டிக்கு இவருடன் மேலும் இரண்டு இந்திய வீரர்களான தேவேந்திரன் மற்றும் கணபதி ஆகியோரும் தகுதிப்பெற்றுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP