ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவாரா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் !

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் ரியாஸ் பாத் தெரிவித்துள்ளார்.
 | 

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவாரா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் !

அஜர்பைஜானில் நடைபெற்றுவரும் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ‘வால்ட்’ பிரிவின் தகுதி சுற்றில் 3-வது இடத்தை கைப்பற்றி இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதிச்சுற்றில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தனது முதல் வாய்ப்பில் சரியாக தரையிறங்காததால், அவருக்கு முழங்காலில் வலியுடன் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தீபா கர்மாகர் தனது 2-வது முயற்சியில் ஈடுபடாமலேயே போட்டியில் இருந்து விலகினார்.

2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தீபா கர்மாகர் இந்த போட்டியின் மூலம் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காயத்தினால் அதற்கு தடை ஏற்பட்டுள்ளது. 

ஆனாலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் ரியாஸ் பாத் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP