கோலி குறித்து கட்டுரை எழுதுக... தேர்வில் கேட்கப்பட்ட வினா!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்த கேள்வி மேற்குவங்க பள்ளி தேர்வில் கேட்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் கோலி குறித்து வினா கேட்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கோலி குறித்து 10 மதிப்பெண் வினா கேட்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோலி குறித்து கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளனர். சும்மாவே நமது மாணவர்கள் கட்டுரை தீட்டுவார்கள் கோலி குறித்த கேள்வி என்றால் சொல்லவா வேண்டும்.

இதுதொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், தேர்வில் கோலி குறித்தக் கேள்வி கேட்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. கோலி குறித்து கேள்வி கேட்கப்பட்டது மகிழ்ச்சி. கோலி குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்து இருந்ததால் அவரை பற்றி கட்டுரை எழுதுவது அவ்வளவு அரிதாக இல்லை என குஷியுடன் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP