உலகில் அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள்: டாப் 10ல் சிந்து

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகளவில் அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்து டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். இந்தபட்டியலில் செரினா வில்லியம்ஸ் முதல் இடம் பிடித்தார்.
 | 

உலகில் அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள்: டாப் 10ல் சிந்து

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்து டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். 

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகளவில் அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து 3வது ஆண்டாக முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியிலில் முதல் 20 இடங்களில் அதிகமாக டென்னிஸ் வீராங்கனைகளே உள்ளனர். இந்நிலையில் இதில் டென்னிஸ் அல்லாத வீராங்கனைகளாக இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் முன்னாள் அமெரிக்க ரேசிங் டிரைவர் டனிக்கா பாட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளார். 

கர்ப்ப காலம் முடிந்து 14 மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய செரினா வில்லியம்ஸ், 18.1 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி உள்ளார். இது இந்திய மதிப்பில் 125 கோடியாகும். பி.வி.சிந்து வருடத்திற்கு 8.5 மில்லியன் டாலர்கள் ஈட்டுவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 59 கோடியாகும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP