உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை முஸ்கன் பான்வாலா தங்கம் வென்றார்

சிட்னியில் நடந்து வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
 | 

25மீ பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை முஸ்கன் பான்வாலா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு நான்காவது தங்கம் கிடைத்தது. சீனாவின் சின் சிஹாங் வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்தின் கன்யாகோர்ன் ஹிருனிபோயிம் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.  

உலக கோப்பை போட்டியில், 9 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களை பெற்று இந்தியா இரண்டாவது இடத்திலும், சீனா 25 பதக்கங்களுடன் முதலிடத்திலும் உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP