இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு- ஜோதிடம் என்ன சொல்லுது?

இன்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல போவது யார் என்பது குறித்து ஜோதிடம் என்ன சொல்லுது தெரியுமா?
 | 

இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு- ஜோதிடம் என்ன சொல்லுது?

இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு- ஜோதிடம் என்ன சொல்லுது?இன்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல போவது யார் என்பது குறித்து ஜோதிடம் என்ன சொல்லுது தெரியுமா?

2வது குவாலிபையர் சுற்றில் கொல்கத்தாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது ஹைதராபாத் அணி. அதன் முன் அந்த அணி அடைந்த தொடர் தோல்விகளில் இருந்து இந்த வெற்றியின் மூலம் மீண்டு வந்துள்ளது. தற்போது 4வது முறையாக சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து கிரீன்ஸ்டோன் லேபோ என்னும் சைன்டிபிக் ஜோதிடர் கணித்துள்ளார்.

அவர் கணிப்பின் படி சென்னை அணியை சன்ரைசர்ஸ் இன்று வீழ்த்தும் என்று கூறியிருக்கிறார். இந்தாண்டு சன்ரைசர்ஸ் அணியும் கடந்தாண்டு மும்பை அணியும் ஒரே நிலையில் தான் உள்ளன. இந்தாண்டு ஹைதராபாத்துக்கு எதிரி சென்னை என்றால் சென்ற ஆண்டு மும்பை அணியின் எதிரி புனே. சென்னைக்கும் புனேவுக்கு இருக்கும் ஒற்றுமையான ஒரே பெயர், ‘ தோனி’. கடந்த ஆண்டு மும்பை அணி மூன்று போட்டிகளில் புனேவிடம் தோல்வியடைந்து இருந்தது. ஆனால் கடைசியாக இறுதிப்போட்டியில் வென்று சாம்பியனானது. மும்பை போல ஹைதராபாத்தும் ஜெயிக்கும் என்கிறார் அவர்.

இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு- ஜோதிடம் என்ன சொல்லுது?மேலும் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கோச் டாம் மூடிக்கு கட்டம் பிரமாதமாக இருப்பதாகவும், சென்னை அணி கேப்டன் தோனி வெற்றியடைய வாய்ப்புகள் குறைவே என கூறியுள்ளார். இருப்பினும், சென்னை வெற்றிபெறும் என்பதுதான் சென்னை ரசிகர்களின் உறுதியான எண்ணம். ஜோதிடம் ஜெயிக்கிறதா, சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP