மகளிர் ஸ்குவாஷ்: வெண்கலம் பெற்றார் தீபிகா பல்லிகல்

ஸ்குவாஷ் அரையிறுதிப் போட்டியில் 0-3 என தோல்வி கண்ட இந்தியாவின் தீபிகா பல்லிகல் வெண்கலம் பெற்றார்.
 | 

மகளிர் ஸ்குவாஷ்: வெண்கலம் பெற்றார் தீபிகா பல்லிகல்

ஸ்குவாஷ் அரையிறுதிப் போட்டியில் 0-3 என தோல்வி கண்ட இந்தியாவின் தீபிகா பல்லிகல் வெண்கலம் பெற்றார். 

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் அரையிறுதி ஆட்டத்தில், மலேசியாவின் நிக்கோல் டேவிட்டிடம் 0-3 (7-11, 9-11, 6-11) என்ற கணக்கில் இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை பல்லிகல் தோல்வி அடைந்தார். இதனால் வெண்கலப் பதக்கத்தை பெற்றார் பல்லிகல். காலிறுதியில் பல்லிகல், 3-0 என கோபயாஷி மிசாக்கியை வீழ்த்தினார்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிக்கோல் டேவிட், 4 முறை ஆசிய டைட்டிலை கைப்பற்றியவர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP